×

அரசு பள்ளியில் எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்ற மாணவனுக்கு மீண்டும் ஹால்டிக்கெட்: கல்வி அலுவலர் விசாரணை

குடியாத்தம்: தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்பு வரை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வளத்தூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு படித்த கணேசனுக்கு  தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழும் பள்ளிக்கல்வித்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டது.

தற்போது, இந்த கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத  கணேசனுக்கு மீண்டும் ஹால்டிக்கெட் சில தினங்களுக்கு முன்பு வந்துள்ளது. இந்த சம்பவம், கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் சம்பத்,  வளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை, 10ம் வகுப்பு அனைத்து பாட ஆசிரியர்கள், அலுவலக பணியாளர் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி, விளக்க கடிதம் பெற்றுள்ளார். இதனை வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளார். அதன்படி வேலூர் மாவட்ட சி.இ.ஓ. முனியசாமி விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : SSLC , Re-ticket for SSLC graduate student in government school: Education Officer Inquiry
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...