நாகர்கோவில் தொடக்கப்பள்ளியில் மாணவிகளிடம் சில்மிஷம் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

நாகர்கோவில்: நாகர்கோவில் பறக்கை கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் நித்ய லெட்சுமணவேல்(59). இவர் நாகர்கோவிலிலில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். இவர் 5ம் வகுப்பு மாணவிகள் சிலரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார் வந்ததையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஷகிலா பானு விசாரணை மேற்கொண்டார். இதில் அவர், 5ம் வகுப்பு மாணவிகள் 3 பேரிடம்  சில்மிஷம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் ஷகிலா பானு புகார் செய்தார்.  போலீசார் விசாரணை நடத்தி, தலைமை ஆசிரியர் நித்ய லெட்சுமணவேல் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து நேற்று முன்தினம் கைது செய்தனர். இதையடுத்து, மாணவிகளிடம் சில்மிஷம் செய்தது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரி லதா, தலைமை ஆசிரியர் நித்திய லட்சுமணவேலை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Related Stories: