திமுக 15வது உட்கட்சி தேர்தல் சென்னை கிழக்கு மாவட்டத்தில் விண்ணப்பம் வழங்கும் இடங்கள்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான பி.கே.சேகர்பாபு வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள 15வது உட்கட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக சென்னை கிழக்கு மாவட்டத்திலுள்ள கொளத்தூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், திரு.வி.க.நகர், எழும்பூர், துறைமுகம் ஆகிய தொகுதிகளிலுள்ள வட்ட கழக உறுப்பினர்கள், மாவட்ட கழகம் சார்பில் வழங்கப்பட்ட விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து தலைமை கழகம் அறிவித்துள்ள உரிய கட்டணத்துடன் கீழ்க்கண்ட இடங்களில் வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கொளத்தூர்- எஸ்.எஸ்.எம். எலைட் மஹால், 70 அடி சாலை ஜவஹர் நகர், வில்லிவாக்கம்- ராஜராஜேஸ்வரி திருமண மண்டபம், முதல் பிரதான சாலை, சிட்கோ நகர், வில்லிவாக்கம், சென்னை-44, அம்பத்தூர்- எச்.டி.எம்.பாரடைஸ், சி.டி.எச்.ரோடு, டெலிபோன் எக்சேஞ்ச் அருகில் அம்பத்தூர், சென்னை-53. திரு.வி.க.நகர்- எம்.கே.டி.மஹால், ஸ்டாரன்ஸ் ரோடு, ஓட்டேரி, எழும்பூர்- தட்சிணாமூர்த்தி திருமண மண்டபம், பட்டாளம், எழும்பூர் துறைமுகம்- வணிக வைசிய திருமண மண்டபம், பவழக்கார தெரு, (கிருஷ்ணன் கோயில் அருகில்), சென்னை - 1. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: