×

தாம்பரத்தை மாடல் நகரமாக உருவாக்க நடவடிக்கை: பேரவையில் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சட்டப் பேரவையில் நேற்று கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை, வணிக வரி மற்றும் பதிவுத்துறை ஆகிய மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா (திமுக) பேசியதாவது:
தாம்பரம் மாநகராட்சி மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகங்கள் அமைக்க இடம் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். ஜி.எஸ்.டி. சாலையில் மத்திய அரசுக்கு சொந்தமான 34 ஏக்கர் நிலமும், மாநில அரசுக்கு சொந்தமான 13 ஏக்கர் நிலமும் உள்ளது. இந்த இடங்களை ஒருங்கிணைத்து, அத்தனை அரசு அலுவலகங்களையும் ஒரே இடத்தில் அமைத்து, தாம்பரத்தை மாடல் நகரமாக உருவாக்க வேண்டும்.

கோ-ஆப்டெக்ஸ் கடையில் குறைந்த விலையில் அழகான, தரமான துணிகள் இருந்தாலும், விற்பனை அதிகமாக இல்லை. எனவே, கோ-ஆப்டெக்சுக்கு என்று தனியாக விளம்பர தூதர் நியமிக்க வேண்டும். தி.நகருக்கு உலகம் முழுவதும் இருந்து வந்து ஷாப்பிங் செய்கிறார்கள். அதனால் தி.நகர் - பாண்டிபஜாரை இணைத்தால், அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். தாம்பரத்தில் அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெறுகிறது. அதனால் தாம்பரத்துக்கு புதிய மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகம் உரவாக்க வேண்டும்.

தாம்பரத்தல் ரூ.13.75 கோடியில் வியாபாரிகளுக்கு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், வியாபாரிகள் கட்டிடம் கட்ட வேண்டாம் என்றார்கள். புதிய கட்டிடம் கட்டினால் தங்களுக்கு மீண்டும் கடை தருவார்களா என்ற பயம் அவர்களுக்கு உள்ளது. அதனால் அவர்களுக்கு மீண்டும் கடை வழங்கப்படும் என உத்தரவாதம் வழங்க வேண்டும். தி.நகருக்கு அடுத்து வணிக நகரமாக தாம்பரம் வளர்ந்துள்ளதால் அரசு தனி கவனம் எடுத்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Tambaram ,SR Raja ,MLA , Action to make Tambaram a model city: SR Raja MLA urges Assembly
× RELATED தாம்பரம் குப்பைக் கிடங்கில் தீ விபத்து..!!