×

சாம்பியன் லீக்: லிவர்பூல் வெற்றி

லிவர்பூல்: ஐரோப்பிய நாடுகளில் உள்ள பிரபல கால்பந்து கிளப்களுக்கு இடையிலான யுஇஎப்ஏ சாம்பியன் லீக் கால்பந்து போட்டி அரையிறுதிக்கு இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல், ஸ்பெயினின் ரியல் மாட்ரிட், வில்லார்ரியல் அணிகள் தகுதிப்பெற்றன. தலா 2 சுற்றுகளாக அரையிறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடந்த அரையிறுதி முதல் சுற்றின் முதல் ஆட்டத்தில் நேற்று முன்தினம் மான்செஸ்டர் சிட்டி 4-3 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தியது. தொடர்ந்து லிவர்பூலில் நேற்று நடந்த முதல் சுற்றின் 2வது ஆட்டத்தில் லிவர்பூல்-வில்லார்ரியல் அணிகள் களம் கண்டன. லிவர்பூல் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. ஆனாலும் முதல் பாதி முடிவில் ஆட்டம் சமனில் இருந்தது.

தொடர்ந்து 2வது பாதியில்  வில்லார்ரியல் அணியின் பெர்விஸ் கோலை தடுக்கும் முயற்சியில் இருந்த போது, அவர் மீது பட்ட பந்து சுய கோலானது. எனவே ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் லிவர்பூல் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.  கூடவே 55வது நிமிடத்தில் லிவர்பூலின் சாடியோ ஒரு கோல் அடித்தார். அதன்பிறகு யாரும் கோலடிக்காததால் லிவர்பூல் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்த அணிகள் மோதும் 2வது சுற்று அரையிறுதி ஆட்டங்கள் ஸ்பெயினில் நடைபெறும்.  மே 4ம் தேதி  வில்லார்ரியல்-லிவிர்பூல், மே 5ம் தேதி ரியல் மாட்ரிட்-மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோத உள்ளன.

Tags : Champions League ,Liverpool , Champions League: Liverpool win
× RELATED சில்லிபாயின்ட்..