இந்திய அணிக்காக ஆடினால் உம்ரான் உலகையே அதிர வைப்பார்

புதுடெல்லி: சன்ரைசர்ஸ் அணி வீரர் உம்ரான் மாலிக்கை இந்திய அணியில் சேர்த்தால் உலகையே அதிர வைப்பார் என்று கிரிக்கெட் பிரபலங்கள் வெட்டோரி, கிறிஸ் லின் ஆகியோர் கூறியுள்ளனர். ஐபிஎல் தொடரில் நியூசிலாந்து வீரர் லாக்கி பெர்கூசனுக்கு(குஜராத்) போட்டியாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வீரர் உம்ரான் மாலிக்கும் அதிவேகத்தில் பந்து வீசுகிறார். இதுவரை அதிகபட்சமாக 153.3கிமீ வேகத்தில் பந்து வீசியிருக்கிறார். பெர்கூசன் 153.9கிமீ வேகத்தில் விசியுள்ளார். கூடவே குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் 4 ஓவர் வீசி 25ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்களை அள்ளி, கிரிக்கெட் உலகின் கவனத்தை மேலும் ஈர்த்துள்ளார்.

நியூசிலாந்து முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி நேற்று, ‘ உம்ரானின் வேகம்  பேட்ஸ்மேன்கள் மத்தியில் பதட்டத்தை உருவாக்குகிறது. பிசிசிஐ கவனிக்க வேண்டிய விஷயம் இது. இந்திய அணியில் உம்ரனுக்கு வாய்ப்பு கிடைத்தால் தன் வேகம் மூலம் உலகையே அதிர வைப்பார். சோயிப் அக்தர், பிரட் லீ, ஷான் டைட் வீசுவது போல் வீசுகிறார்’ என்று தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிறிஸ் லின், ‘இந்திய அணியில் இடம் பெற உம்ரான் தயாராகி விட்டார். ஆஸ்திரேலியாவில் உள்ள ஆடுகளங்கள் வேகத்துக்கு ஒத்துழைக்கும் களங்கள் என்பதால், உலக கோப்பை அணியில் இடம் பிடிக்க உம்ரானுக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதன் மூலம் அவர் சர்வதேச அளவில் பெரும் புயலாக மையம் கொள்ளப்போகிறார்’ என்றார்.

Related Stories: