திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக பி.வி.ரம ணா தேர்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக உட்கட்சி பதவிகளுக்கான நிர்வாகிகள் தேர்வு செய்து அக்கட்சி தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் இதேபோல், மாவட்ட அவைத் தலைவராக இ.இன்பநாதன்,  இணைச்செயலாளராக ஆர்.விஜயலட்சுமி, மாவட்ட துணைச் செயலாளர்களாக எஸ்.சாந்தி பிரியா, கமாண்டோ ஏ.பாஸ்கரன், மாவட்ட பொருளாளராக ஜே.பாண்டுரங்கன், பொதுக்குழு உறுப்பினர்களாக ஆர்.டி.இ.சந்திரசேகரன் (திருவள்ளூர் தொகுதி), ஆர்.இளங்கோவன்(திருத்தணி தொகுதி), பத்மாவதி சந்திரசேகரன் (திருவள்ளூர் தொகுதி)  ஆகியோரை தேர்வு செய்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

Related Stories: