நான் எப்போதும் சிறுபான்மை மக்களோடு இருப்பவன், நீங்களும் என்னோடு இருப்பவர்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.!

சென்னை: அனைவருக்கும் அனைத்தும் சென்று சேர வேண்டும் என்பதே திமுகவின் கொள்கை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை கொளத்தூரில் இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை, கொளத்தூரில் இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள மனிதநேயம் நாடு முழுவதும் ஒரு மாடலாக உருவாகியுள்ளது.

இதுவும் ஒருவகையில் திராவிட மாடல் தான். திராவிட மாடல் குறித்து சொன்னால் சிலருக்கு எரிச்சல், ஆத்திரம் வருகிறது. அனைவருக்கும் எல்லாம் சேர வேண்டும் என்பது தான் திமுகவின் லட்சியம், கொள்கை. ரம்ஜான் பண்டிகையும் ஒரு திராவிட மாடல்தான், கடந்த 2006ல் மைனாரிட்டி மக்களுக்காக இருக்கும் ஆட்சி தான் திமுக ஆட்சி என முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: