×
Saravana Stores

சீமானூர், விழப்பள்ளத்தில் ஜல்லிக்கட்டு கோலாகலம்: 1,300 காளைகள் சீறிப்பாய்ந்தன

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே சீமானூர் மற்றும் ஜெயங்கொண்டம் அருகே விழப்பள்ளத்தில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் 1,300 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. புதுக்கோட்ைட மாவட்டம் கீரனூர் அருகே உள்ள சீமானூரில் அய்யனார் கோயில் திருவிழாவையொட்டி  ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்தாண்டு ஜல்லிகட்டு இன்று நடந்தது.  தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, சிவகங்கை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து  800 காளைகள் அழைத்து வரப்பட்டன. 300 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.  காளைகளுக்கும், வீரர்களுக்கும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்தனர்.

காலை 8.30 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை ஆர்டிஓ குழந்தைசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் வாடிவாசலில் இருந்து முதலில் கோயில் காளையும், அடுத்தடுத்து மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள்,  பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், அண்டா, சில்வர் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த பிராஞ்சேரி ஊராட்சி விழப்பள்ளம்  புனித செபஸ்தியார் ஆலயம் முன் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை நடந்தது.

பல்வேறு இடங்களில் இருந்து 500 காளைகள் அழைத்து வரப்பட்டன. 150 வீரர்கள் களமிறங்கினர். காலை 7 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை உடையார்பாளையம் ஆர்டிஓ பரிமளம் துவக்கி வைத்தார். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். வாடிவாசலில் இருந்து கோயில் காளை முதலாவதாக அவிழ்த்து விடப்பட்டது. அதன்பின் ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. இங்கு சைக்கிள், குக்கர், தங்கக்காசு, வெள்ளிக்காசு, எவர்சில்வர் பாத்திரங்கள், ரொக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது. ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கலை கதிரவன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Seemanur ,Jallikkadu ,Velapalam , Seemanur, Vilappallam Jallikattu riot: 1,300 bulls snarled
× RELATED ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான...