×

சென்னை அருகே முதலமைச்சரை வேந்தராக கொண்டு சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

சென்னை: சென்னை அருகே சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா நிறைவேறிருக்கும் நிலையில், அதற்க்கு முதலமைச்சரை வேந்தராக கொண்டு சித்த மருத்துவ பல்கலைக் கழகம் அமைபபதற்கான சட்ட மசோதாவும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முதலமைச்சரை வேந்தராக கொண்டு தமிழகத்தில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான சட்ட மசோதா பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மாநிலத்தில் சித்த மருத்துவம், ஆயுர்வேதா, யுகானி, யோகா, ஹோமியோபதி மற்றும் இயற்க்கை மருத்துவம் ஆகிய துறைகளுக்கென தனி பல்கலைக்கழகம் நிறுவுவது தொடர்பான சட்ட முன்வடிவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியம் நேற்று தாக்கல் செய்திருந்தார்.

இது மாநிலத்தினுடைய பாரம்பரிய மருத்துவமுறையின் பெருமைகளை போற்றக்கூடிய வகையில், இந்திய மருத்துவ முறைக்கான சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடக்கபடும் என கடந்த நிதிநிலை அறிக்கையின் போது அரசானது அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதன் அடிப்படையில் சென்னைக்கு அருகே இந்த பல்கலைக்கழகத்தை தொடங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் நேற்று சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நடை பொறுத்தவரையில், தமிழ்நாடு இயல், இசை, கவின் கலை பல்கலைக்கழத்தை தவிர, பிற அனைத்து அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் தற்போது இருந்துவருகிறார். இந்நிலையில் புதிதாக தொடங்கப்படும் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சர் இருப்பார் எனவும் சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா என அனைத்திற்கும் முதல்-அமைச்சரே தலைமை வகித்து பட்டங்கள், பட்டயங்கள் அல்லது பிற கல்வி சிறப்பு சட்டங்கள் அனைத்தையும் வழங்குவதற்கான அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சித்த மருத்துவக்கல்லூரிகள், யுகானி, யோகா, ஹோமியோபதி மற்றும் இயற்க்கை மருத்துகல்லூரிகள் அனைத்தும் புதிய பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் எனவும் அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Bill ,Siddha Medical University ,Chennai ,Chief Minister ,Legislative ,Assembly , Chennai, Chief Minister, Vander, Siddha Medical University, Legislature,
× RELATED ராமேஸ்வரம் கோயில் உண்டியல் வழக்கு:...