×

ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்; திரளானோர் பங்கேற்க கே.எஸ்.அழகிரி அழைப்பு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: தமிழக நலன்களுக்கு விரோதமாக நீட் உள்ளிட்ட 13 மசோதாக்களை கிடப்பில் போட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக எதேச்சதிகார முறையில் செயல்பட்டு வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்களை வன்மையாகக் கண்டிக்கின்ற வகையில் இன்று மாலை 3 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ராஜிவ் காந்தி சிலை அருகிலிருந்து புறப்பட்டு ஆளுநர் மாளிகையை நோக்கி கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெறும்.

மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முன்னிலையில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை, காங்கிரஸ் முன்னணி தலைவர்கள், செயல் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்கிற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமாக அமைய இருக்கிறது. இம்மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் பங்கேற்பதோடு, தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் கண்டன ஆர்ப்பாட்டத்தின் மூலம் தமிழக ஆளுநருக்கு உணர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Governor ,R. N.N. Kandana ,Tamil Nadu Congress ,Ravii; ,Krisha ,Sri Lanka , Tamil Nadu Congress protests against Governor RN Ravi; KS Alagiri invites the masses to participate
× RELATED ஆளுநர் மாளிகையில் பெண் ஊழியரிடம்...