×

வான்கடேவில் இன்று மோதல்; டெல்லியை பழி தீர்க்குமா கேகேஆர்?

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 41வது லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லி 7 போட்டியில் 3 வெற்றி, 4 தோல்வி என 7வது இடத்தில் உள்ளது. கடைசி போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக நோபால் சர்ச்சைக்கு மத்தியில் 15 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதை மறந்து இன்று வெற்றி நோக்கில் களம் காண்கிறது. மறுபுறம் கேகேஆர் முதல் 4 போட்டியில் 3ல் வென்று நல்ல தொடக்கம் கண்டது. ஆனால் கடைசி 4 போட்டியிலும் தோற்று 8வது இடத்தில் உள்ளது.

ஏலத்தில் தக்க வைக்கப்பட்ட வெங்கடேஷ் அய்யர், வருண்சக்ரவர்த்தி மோசமாக ஆடி வருகின்றனர். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், ரஸ்சலை மட்டுமே நம்பி பேட்டிங் உள்ளது. இரு அணிகளும் பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்க வெற்றி கட்டாயம் என்ற நெருக்கடியில் உள்ளன. இரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 13ல் டெல்லி, 16ல் கொல்கத்தா வென்றுள்ளது. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. நடப்பு சீசனில் கடந்த 10ம்தேதி மோதிய போட்டியில் டெல்லி 44 ரன் வித்தியாசத்தில் வென்றது. அதற்கு பழிதீர்க்க கேகேஆர் இன்று போராடும்.

Tags : Wankhede ,KKR ,Delhi , Conflict today in Wankhede; Will KKR blame Delhi?
× RELATED எங்கள் `இளம்’ விக்கெட் கீப்பரின்...