அம்மன் கோயில் சித்திரை விழாவில் பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருப்புத்தூர்: திருப்பித்தூர் அருகே கண்டரமாணிக்கம் மாணிக்கநாச்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.கண்டரமாணிக்கம் மாணிக்கநாச்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப்.19ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது.

9ம் திருவிழாவான நேற்று காலை 10 மணியளவில் கோயில் அருகே கூடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் சுமந்து கோயிலை வலம் வந்து தெற்குப்பட்டு மூலஸ்தானத்திற்கு பால்குடங்களுடன் சென்றனர். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.தொடர்நது தெற்குபட்டு மூலஸ்தானத்திலிருந்து தேர் சப்பரத்தில் சாமி கோயில் வந்தடைந்தது. 10ம் நாள் நிகழ்வாக இன்று மஞ்சுவிரட்டு நடைபெற உள்ளது. இரவு பூப்பல்லாக்கில் புஷ்ப அலங்காரத்தில் சாமி திருவீதி உலா நடைபெறும்.

Related Stories: