பாண்டியன் கோட்டையில் மீண்டும் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு

காளையார்கோவில்: காளையார்கோவிலில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க பாண்டியன் கோட்டையில் அதிகளவில் கருவேல மரங்கள் காடாக சூழ்ந்துள்ளது.காளையார்கோவிலில் உள்ள வரலாற்றுச சிறப்பு மிக்க பாண்டியன் கோட்டை சுமார் 37 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம். இவ்விடத்தை சில ஆண்டுகளுக்கு முன் சுற்றுலாதலமாக மாற்றித் தருவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால் அறிவிப்போடு விட்டு விட்டார்கள்.

தற்போது 37 ஏக்கர் பரப்பளவிலும் அதிகளவில் கருவேல மரங்கள் காடுகள் போன்று உள்ளது. அப்பகுதியில் பகல் மற்றும் இரவு நேர பாராகவும், திறந்தவெளி கழிப்பிடமாகவும், கழிவுப்பொருட்களை கொட்டும் குப்பை கிடங்காகவும் பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றார்கள். இவ்விடத்தில் உள்ள கருவேல் மரங்களை அகற்றி பாதுகாக்கும் வகையில் சுற்றுலாதலமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காளையார்கோவில் பகுதியில் கருவேல் மரங்கள் அகற்றும் பணி மந்தமாக நடைபெறுவதாக இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

Related Stories: