கோயில் தேரோட்ட வீதிகளில் உள்ள மின் இணைப்புகள் புதைவட மின் கம்பிகளாக மாற்றப்படும் : அமைச்சர் செந்தில்பாலாஜி

சென்னை: கோயில் தேரோட்ட வீதிகளில் உள்ள மின் கம்பிகள் இனி புதைவட மின் கம்பிகளாக மாற்றப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். தஞ்சை களிமேடு கிராமத்தில் நேற்று அதிகாலை நடந்த தேர் திருவிழாவில் ஏற்பட்ட மின் விபத்தின் காரணமாக 11 பேர் பலியாகினர். தமிழக சட்டப்பேரவையில் இன்று கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை மற்றும் பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது.

அப்போது பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, இனி வரும் காலங்களில் தேரோட்ட வீதிகளில் உள்ள மின் இணைப்புகள் புதைவட மின் கம்பிகளாக மாற்றப்படும். ஏற்கெனவே, திருவாரூர் உள்ளிட்ட 3 கோயில்களின் தேரோடும் வீதிகளில் மின் இணைப்பை புதைவடமாக மாற்றும் பணி நடக்கிறது. என்று அவர் கூறினார். இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்,11 மாத காலமாக பல பள்ளி நிகழ்வுகளில் கலந்துகொண்டு பல மாலைகளை மாணவர்களுக்கு சூட்டியுள்ளேன், ஆனால், முதன்முறையாக நேற்று உயிரிழந்த 8 ஆம் வகுப்பு மாணவனின் சடலத்துக்கு மாலை அணிவித்தேன் என கலங்கிய கண்களுடன் உருக்கமாகக் கூறினார்.

Related Stories: