முதுமலை புலிகள் காப்பகத்தில் பூத்துக் குலுங்கும் மயில் கொன்றை மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

கூடலூர்: முதுமலை புலிகள் காப்பகத்தில் கொன்றை மலர்கள் செந்நிறத்தில் பூத்துக்குலுங்கிறது.முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு பகுதியில் ஏராளமான மயில் கொன்றை மரங்கள் உள்ளன. ஒவ்வொரு வருடமும் கோடைகால மே மாதத்தில் இந்த மரங்களில் செந்நிற பூக்கள் மலர்ந்து இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வரவேற்பளிக்கும். இந்த மலர்கள் தற்போது பெய்த கோடை மழை காரணமாக சற்று முன்னதாகவே பூத்து காணப்படுகிறது.

இப்போது முதுமலைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளும் முதுமலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் இந்த மலர்களின் அழகை ரசித்து செல்கின்றனர். இதே போல், இங்குள்ள குறும்பர் இன பழங்குடியின மக்கள் வசிக்கும் லைட் பாடி பகுதியை ஒட்டி உள்ள மரங்கள் அதிகளவில் இருப்பதால், உள்ளூர் வாசிகளுக்கு இந்த மலர்களின் நிறம் மனதுக்கு இதமாக இருப்பதாகவும் அதனைமிகவும் ரசிப்பதாகவும் பழங்குடியின மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: