×

தேனியில் மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள்

தேனி: தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில்  மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள்  நேற்று நடந்தது. இப்போட்டிகளை மாவட்ட கலெக்டர்  முரளீதரன்  துவக்கி வைத்தார். இதில் கை, கால் பாதிக்கப்பட்டோருக்கு இறகுப்பந்து போட்டிகளும், பார்வையற்றோர்க்கு வாலிபால் போட்டிகளும், மனநலம் பாதிக்கப் பட்டவருக்கு எறி பந்து போட்டிகள்காதுகேளாதவர்களுக்கு கபடி போட்டி உள்ளிட்ட குழு போட்டிகள் நடத்தப்பட்டன.

மேலும், 50 மீட்டர் ஓட்டம் 100 மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட தடகள போட்டிகள் நடைபெற்றது.போட்டிகளில் முதல் 3 இடங்களை வென்ற வீரர்களுக்கு கலெக்டர் முரளிதரன் பதக்கம்  வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Tags : Theni , Sports competitions for the disabled in Theni
× RELATED தேனியில் தபால் ஓட்டுக்கான...