கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சியில் பிளாஸ்டிக் பாட்டில்கள் குவிப்பால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு உள்ளது. கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வந்தால் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில், இவை பறிமுதல் செய்யப்பட்டு அப்பகுதியிலே கொட்டப்பட்டு வருகிறது. வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே வனப்பகுதிக்குள் இந்த பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள்கொட்டப்படுவதால், இப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே நீதிமன்ற உத்தரவுப்படி கண்ணாடி பாட்டில்கள் மலைப்பகுதியில் தடை செய்யப்பட வேண்டிய நிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் வனப்பகுதியில் கொட்டப்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வனப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் பாட்டில்களை உடனடியாக அகற்றவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: