×

நூல் விலையை கட்டுப்படுத்தவில்லை எனில் உற்பத்தியை நிறுத்துவதோடு வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபடுவோம்: ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு

கரூர்: நூல் விலையை கட்டுப்படுத்தவில்லை எனில் ஜவுளி உற்பத்தியை நிறுத்துவதோடு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். கரூரில் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் தலைவர் கோபாலகிருஷ்ணன் நூல் விலை உயர்ந்து வருவதால் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர் என்கிறார்.

நூல் ஏற்றுமதிக்கு வழங்கப்படும் மானியத்தை நிறுத்தி, ஏற்றுமதிக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கூறிய அவர் அப்போதுதான் சந்தைக்கு நூல் வரத்து சீராக இருக்கும் என்றார்.

இது குறித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:
ஒன்றரை வருடங்களாக நூல் விலை அதிகம் ஏற்றம் கண்டுள்ளது. 2021 டிசம்பர் மதம் வரை 40 சதவிகித விலையேற்றம், 2022-ல் ஏப்ரல் 15-ம் தேதி வரை சுமார் 50 சதவிகிதம் வரை நூல் விலை உயர்ந்துள்ளது. ஒன்றிய அரசு பஞ்சின் மீதான இறக்குமதி நீக்கியதற்கு பிறகு நூல் விலை குறையும் என எதிர்பார்த்தோம். அதற்கு பிறகும் தொடர்ந்து நூல் விலை உயர்ந்து வருகிறது என கோபாலகிருஷ்ணன் கூறினார்.

ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தலையிட்டு சந்தையில் தேவையான நூல் கிடைபப்தற்கு ஆவண செய்யவேண்டும் இல்லையெனில் இரண்டு வாரங்களில் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் நிரந்தரமாக கடையை மூட முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கோபால கிருஷ்ணன் தெரிவித்தார்.

இதனால் கரூரில் பணியாற்ற கூடிய 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இலக்கும் நிலை ஏற்படும் என்றும், மறைமுகமாக வேலை வாய்ப்பு பெரும் 8 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். மேலும் ரூ.1,500 கோடி அளவிற்கு விற்பனை இழப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Tags : Textile Manufacturers Association , Yarn Price, Strike, Textile Manufacturers Association`
× RELATED நூல் விலையேற்றத்தை கண்டித்து 15...