பேரூராட்சி, நகராட்சிகளை தரம் உயர்த்த குழு அமைப்பு: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், ‘‘அனைத்து உறுப்பினர்களும் தங்கள் பகுதியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டுமென்றும், பேரூராட்சியாக இருப்பதை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டுமென்றும், நகராட்சிகள் அதிகமாக இருக்கிற இடத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டுமென்றும் விருப்பப்படுகிறார்கள். அதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, அதிகாரிகள் மூலமாக அதன் வருவாய் மற்றும் மக்கள் தொகையின் அடிப்படையிலே கணக்கெடுத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுகின்றபொழுது, அதற்கான செலவுகளை கணக்கில் கொண்டு, அந்த பணி தொடங்கப்பட்டிருக்கிறது. எனவே அந்த பணிகள் முடிந்த பிறகு, அவர்கள் தருகிற அறிக்கையின்படி, பரிசீலிக்கலாம்’’ என்றார்

Related Stories: