தஞ்சாவூர் விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரிக்க:ஒரு நபர் விசாரணை குழு :அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

 தஞ்சாவூர் களிமேடு அப்பர் கோயில் தேரோட்டமானது களிமேடு பகுதியில் கடைசி பகுதிக்கு சென்று திரும்பும் போது, தேரின் பின்புறம் இணைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் பளுவின் காரணமாக எதிர்பாராதவிதமாக ஒருபக்கமாக சப்பரம் இழுத்து செல்லப்பட்டு உயர் மின்னழுத்தக் கம்பியுடன் உரசி விபத்து ஏற்பட்டது. இதில் 11 பேர் உயிர் இழந்தனர். சப்பரத்தின் உச்சிப் பகுதியினை மடக்கியிருந்தால் இந்த விபத்து முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்கும்.இதுபற்றி விசாரிக்க வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் விசாரணைக்கு குழு அமைத்திட முதல்வர் ஆணையிட்டுள்ளார். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Related Stories: