×

ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து பாதிப்பு கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

பேரவையில் நேற்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் டவர்-1, டவர்-2 கட்டிடங்களுக்கு பின்புறம் 105 வயதுடைய பழமையான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் முதல் மற்றும் 2வது தளத்தில் நரம்பியல் துறையும், 3வது தளத்தில் இதயவியல் துறையும் உள்ளது. நேற்று காலை 10.21 மணிக்கு தரைத்தளத்தில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக மொத்தமுள்ள 99 நோயாளிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடந்த 10 ஆண்டாக அந்த கட்டிடம் பராமரிப்பு இல்லாமல் இருந்துள்ளது. 2 மாதத்துக்கு முன்பு அக்கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை வந்தது. அடுத்த ஆண்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Tags : Rajivkandi government ,Minister ,Ma. Subramanian , Rajiv Gandhi Government Hospital fire station, building will be demolished, building will be constructed, Minister Ma Subramanian
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...