×

ஊழல் வழக்கில் ஆங்சாங் சூகிக்கு 5 ஆண்டு சிறை

பாங்காங், ஏப். 28: மியான்மரில் ஆங்சாங் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி தலைமையிலான அரசை கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரியில் ராணுவம் கலைத்தது. அரசின் தலைமை ஆலோசகராக இருந்த ஆங்சாங் சூகியும் கைது செய்யப்பட்டார். அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது யாங்கூன் முன்னாள் முதல்வர், அவரது கட்சியின் மூத்த தலைவர் பியோ மின் தெய்னிடம்  இருந்து தங்கக்கட்டிகள் மற்றும் பல ஆயிரம் டாலர்களை லஞ்சமாக பெற்றதாக சூகிக்கு எதிராக ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விசாரணைகள் முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் அவருக்கு நேற்று 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, மற்றொரு வழக்கில் அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கின்றது. அவர் மீது இன்னும் 10 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ்  அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். எனவே, மற்ற வழக்குகளிலும் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டால் 100 ஆண்டுகளுக்கும் மேல் சிறை தண்டனை கிடைக்கும்.

Tags : Anchong Suqi , Aung San Suu Kyi jailed, 5 years corruption
× RELATED கவிஞர் அறிவுமதிக்கு 2023-ம் ஆண்டுக்கான உலகத் தமிழ்ப் பீட விருது அறிவிப்பு..!!