×

சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதா: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல்: முதல்வர் வேந்தராக இருப்பார்

சென்னை: சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது.சென்னைக்கு அருகில் இந்திய மருத்துவ முறைகளுக்கான தனி சித்த மருத்துவ பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான அமைச்சர் சட்டமன்றப் பேரவையில் அறிவித்தார். அதன்படி தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழகம் என்ற பெயரில் செயல்படும். வேந்தர், இணைவேந்தர், துணை வேந்தர், பதிவாளர், நிதி அலுவலர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, இயற்கை மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஒவ்வொரு புலங்களின் இயக்குனர், நூலகர் மற்றும் பல்கலைக்கழகத்தின் அலுவலர்கள் இருப்பர். தமிழகத்தின் முதல்வர் பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருத்தல் வேண்டும். பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா மற்றும் எதற்கும் தலைமை வகித்து பட்டங்கள், பட்டயங்கள் அல்லது பிற கல்வி சிறப்பு பட்டங்கள் அவற்றை பெறுவதற்கு உரிமையுடையவர்களுக்கு வழங்குவார்.

Tags : Minister ,Ma. Subramanyan ,Chief Chancellor , Siddha Medical University, Minister Ma Subramaniam Chief Minister Vendar
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...