காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயில் அருகே ஜோஸ் ஆலுக்காஸ் 22வது புதிய கிளை: டிஐஜி சத்யபிரியா திறந்து வைத்தார்

காஞ்சிபுரம்: தங்க நகை விற்பனையில் தமிழகத்தில் பல்வேறு கிளைகளை திறந்து தொடர்ந்து பல்வேறு சலுகைகளை அளித்து விற்பனை செய்யும் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம், காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் உள்ள குமரகோட்டம் முருகன் கோயில் அருகே தனது 22வது புதிய கிளையை நிறுவியது. இதைதொடர்ந்து புதிய கிளை திறப்பு விழா நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் கிளை மேலாளர் தேவராஜ் வரவேற்றார். காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, புதிய கிளையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி நகை விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர், புதிய டிசைன் தங்க, வைடூரிய நகைகளை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் ஜோஸ் ஆலுக்காஸ் குழும நிர்வாக இயக்குனர்கள் வர்கீஸ் ஆலுக்கா, பால் ஆலுக்கா, ஜான் ஆலுக்கா, துணை நடிகைகள் டெல்டா திவ்யா, மௌனிகா, திமுக நகர செயலாளர் சன் பிராண்ட் ஆறுமுகம், 8வது வார்டு கவுன்சிலர் சூர்யா சோபன்குமார், வரமகாலட்சுமி சில்க்ஸ் உரிமையாளர் கோபிநாத் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்

Related Stories: