மாணவியை கர்ப்பிணியாக்கிய வாலிபர்: போக்சோவில் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா, ஆரணி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி சென்னை மேடவாக்கத்தில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தன் சொந்த ஊரான ஆரணியில் இருந்து பள்ளிக்கு செல்ல பஸ் வசதி இல்லாத காரணத்தால் அவர் திருவள்ளூரை அடுத்த ராமதண்டலம் கிராமம், பஜனை கோவில் தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டில் கடந்த அக்டோபர் மாதம் முதல் தங்கி படித்து வந்தார். மேலும் அதே வீட்டில் நாகராஜ் (29) என்பவர் தனது மனைவி மற்றும் 2 பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். நாகராஜ் சிறுமியிடம் பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 24.10.2021 அன்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் நாகராஜ் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை வலுக்கட்டாயமாக கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டுள்ளார். இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் அவரை மிரட்டி வந்துள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அவர் அந்த சிறுமியிடம்  வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கட்டாயப்படுத்தி பலமுறை உடலுறவு கொண்டுள்ளார். இதன் காரணமாக அச்சிறுமி கர்ப்பமானார். இது குறித்து அவர் தன் பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருவள்ளூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து நேற்று நாகராஜை கைது செய்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

Related Stories: