திருச்சியில் 104 டிகிரி வெயில்

சென்னை: தமிழகத்தில் நேற்று பெரும்பாலான இடங்களில் வெயில் அதிகரித்து காணப்பட்டது. அதிகபட்சமாக திருச்சியில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. கரூர், திருத்தணி, வேலூர் பகுதிகளில் 102 டிகிரி வெயில் நிலவியது. ஈரோடு, மதுரை, பாளையங்கோட்டை, தஞ்சாவூர் 100 டிகிரி, சென்னை, கடலூர், தர்மபுரி, சேலம் 99 டிகிரி, வெயில் நிலவியது. இந்நிலையில், வெப்ப சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய சில இடங்களில் லேசானது முதல் மிதமான

மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

Related Stories: