10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பாடத்திட்ட விவரங்கள் தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியீடு : தேர்வுத்துறை இயக்குநர்

சென்னை: தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பாடத்திட்ட விவரங்கள் தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே குறைக்கப்பட்ட பாடத் திட்டங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் என தேர்வுத்துறை இயக்குநர் கூறியுள்ளார். dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பாடத்திட்டத்தை அறிந்து கொள்ளலாம் என கூறியுள்ளது. தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு, 2021 - 2022 -ம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் மே-2022 மாதத்தில் நடைபெறவுள்ளழ.

இத்தேர்விற்கான வினாக்கள் 2021 - 2022-ம் கல்வியாண்டிற்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட முன்னுரிமை பாடத்திட்டத்தில் (Priority Syllabus - குறைக்கப்பட்ட) உள்ள பாடங்கள் முழுவதிலிருந்தும் கேட்கப்படும். இப்பாடத்திட்டம் அரசு தேர்வுகள் இயக்க இணையதளத்தில் (www.dge.tn.gov.in)-Notification என்ற பகுதியில் வெளியிடப்பட்டுள்ளது என தேர்வுத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.

Related Stories: