மக்களுடன் எப்போதும் இருப்பேன்: தஞ்சையில் நடந்த தேர் விபத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுக்கு பின் பேட்டி

தஞ்சை: மக்களுடன் எப்போதும் இருப்பேன் என தஞ்சையில் நடந்த தேர் விபத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுக்கு பின் பேட்டியளித்தார். சம்பவம் குறித்து அறிந்ததும், மீட்பு பணிகளை உடனடியாக செய்ய உத்தரவிட்டேன் எனவும் தெரிவித்தார். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை வழங்க அறிவுறுத்தி உள்ளேன். விபத்தில் காயமடைந்தவர்களுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள ஐஏஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

வருவாய் துறை முதன்மை செயலாளர் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்வார் என கூறினார். தஞ்சை களிமேடு தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து காயமடைந்தவர்களை தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை  நேரில் சந்தித்து முதல்வர் உடல்நலம் கேட்டறிந்தார். தஞ்சை களிமேடு கிராமத்தில் நிகழ்ந்த துயரத்தை சிலர் அரசியலாக்க நினைக்கிறார்கள் என முதல்வர் குற்றம் சாட்டினார். தூற்றுவோர் பற்றி நான் கவலைப்படுவதில்லை எனவும் தெரிவித்தார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவிக்காக காசோலையை வழங்கினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, அமைச்சர் அன்பில் மகேஷ், எம்.பி. டி.ஆர்.பாலு, தஞ்சை மாவட்ட ஆட்சியர், மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: