×

தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய சாதனையாளருக்கு கலைஞர் பெயரில் 'கலைஞர் கலைத் துறை வித்தகர்'விருது வழங்கப்படும்: அமைச்சர் சுவாமிநாதன் அறிவிப்பு

சென்னை: தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முத்தமிழ் அறிஞர கலைஞர் பெயரில் கலைஞர் கலைத் துறை வித்தகர் விருது வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சுவாமிநாதன் அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3ம் தேதி விருத்தாளர்களுக்கு ரூ. 10 லட்சம் மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்படும். தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகத்திற்கு மயிலாடுதுறையில் அரங்கம் அமைக்கப்படும். மயிலாடுதுறையில் ரூ.3 கோடியில் வேதநாயகத்திற்கு அரங்கம், சிலை அமைக்கப்படும்.

பத்திரிக்கையாளர் ஓய்வூதிய திட்டத்தில் பணிக்கொடை, பனிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்த்தப்படும். பணிக்கொடை, பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும். பத்திரிக்கையாளர்களுக்கான மருத்துவ உதவித்தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தை உலகத்தரத்திற்கு உயர்த்திட முதற்கட்ட பணிகளுக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.


Tags : Minister ,Swaminathan , Artist Award in the Name of Artist for Outstanding Achievement in Tamil Film: Minister Swaminathan Announcement
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...