ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து: கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை...பேரவையில் அமைச்சர் விளக்கம்

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று பேரவையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

இன்று காலை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர் மிக தீவிரமாக தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

அந்தப்பகுதியில் இருந்த நியூரோ பிரிவில் உள்ள நோயாளிகள் பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். மேலும் நோயாளிகளை கிரேன் உதவியுடன் மீட்ட்கப்பட்டனர். அதனையடுத்து ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீ விபத்து முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது.

அப்போது மருத்துவமனைக்கு சென்று  தீயணைப்பு மீட்பு பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்கிறார். தீவிபத்து ஏற்பட்ட இடத்தில் துரிதமாக செயல்பட அமைச்சர் உத்தரவிட்டார். அதனையடுத்து தற்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் இந்த விபத்து குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் விபத்து ஏற்பட்ட கட்டடம் 105 ஆண்டுகள் பழைமையானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. தீ விபத்து ஏற்பட்டதும் நோயாளிகள் அனைவரும் உடனடியாக வேறு கட்டடத்திற்கு மாற்றப்பட்டனர். மருத்துவமனை தீ விபத்தில், உயிர் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

Related Stories: