×

சன்ரைசர்ஸ்- குஜராத் இன்று மோதல் : முதல் இடத்தை பிடிக்கப்போவது யார்?

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 40வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத் 7 போட்டியில் ஆடி 5 வெற்றி (சென்னை, குஜராத்,  கொல்கத்தா, பஞ்சாப், பெங்களூருக்கு எதிராக), 2 தோல்வியுடன் (ராஜஸ்தான்,  லக்னோ அணிகளிடம்) 10  புள்ளிகளுடன் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. முதல்  2 போட்டியிலும் தோல்வியை சந்தித்த ஐதராபாத் அடுத்த 5 போட்டியிலும் வென்று  மிரட்டியது. பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா 220 ரன் எடுத்துள்ளார். ராகுல்  திரிபாதி, மார்க்ராம் பார்மில் உள்ளனர் பந்து வீச்சில் டி.நடராஜன் 15  விக்கெட் எடுத்து 2வது இடத்தில் உள்ளார். இன்று 4 விக்கெட் எடுத்தால் முதல்  இடத்திற்கு முன்னேறலாம். மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக்,  புவனேஷ்வர்குமாரும் மிரட்டுகின்றனர்.

மறுபுறம் புதுமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 6ல் (லக்னோ, டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், சென்னை, கொல்கத்தா அணிகளுக்கு எதிராக) வென்றுள்ளது. தோல்வி அடைந்த ஒரு போட்டி ஐதராபாத்திற்கு எதிராக தான்.  கடந்த 11ம் தேதி டி.ஒய்.பாட்டில் ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் ஐதராபாத் 8விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதற்கு பதிலடி தரும் முனைப்பில் குஜராத் இன்று களம் இறங்கும். கேப்டன் ஹர்திக் பாண்டியா 295 ரன் அடித்துள்ளார். டேவிட் மில்லர், சுப்மான் கில், அபினவ் மனோகர் வலு சேர்க்கின்றனர். பந்து வீச்சில் முகமது ஷமி, பெர்குசன், ரஷீத் கான், யாஷ் தயாள் பார்மில் உள்ளனர். இரு அணிகளும் இன்று வெற்றி பெற்று பட்டியலில் முதல் இடத்தை பிடிக்க போராடும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags : SunRisers ,Gujarat , Sunrisers- Gujarat, Conflict
× RELATED சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மகேஷ் பாபு சந்திப்பு