×

தஞ்சாவூர் தேர் விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் தலா ரூ. 2 லட்சம் நிவாரணம்!!


சென்னை : தஞ்சை தேர்பவனி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தஞ்சை மாவட்டம் களிமேடு பகுதியில் நடந்த தேர் விழாவில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சாலையில் தேங்கி இருந்த நீரில் மின்சாரம் பாய்ந்து 14 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சமும் , காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா லட்சமும்,  காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 15 பேர்களுக்கு தலா 25,000 ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திமுக தலைவரும்,  முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின் விபத்து ஏற்பட்டதால், 11 பேர் பலியான நிலையில், 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இம்மின் விபத்தில் இறந்த 11 குடும்பங்களுக்கு தலா 2 இலட்ச ரூபாய் வீதமும்; காயமடைந்த 14 பேர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 25 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags : Thanjavur ,Cheru Accident , Thanjavur, Chariot, Accident, DMK, Relief
× RELATED வாக்கு பதிவான இயந்திரங்கள் பூட்டி...