×

ரம்ஜான் பண்டிகை விற்பனை களைகட்டியது மேலப்பாளையம் சந்தையில் செம்மறி ஆடுகள் குவிந்தன-வியாபாரிகள் மினி லாரிகளில் அள்ளிச் சென்றனர்

நெல்லை : ரம்ஜான் பண்டிகையை ஒட்டி மேலப்பாளையம் சந்தையில் நேற்று செம்மறி ஆடுகள் குவிந்தன. வியாபாரிகள் மினி லாரிகளில் பண்டிகைக்கு தேவையான ஆடுகளை அள்ளிச் சென்றனர்.தென் மாவட்டங்களில் ஆடுகள் விற்பனை அடிப்படையில் எட்டயபுரம் மற்றும் மேலப்பாளையம் ஆட்டுச் சந்தைகள் புகழ் பெற்றவையாகும். இச்சந்தைகளுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் வருவது வழக்கம். நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஆட்டுச் சந்தை வாரம்ேதாறும் செவ்வாய்கிழமை நடந்து வருகிறது. இச்சந்தையில் ரம்ஜான் பண்டிகை காலங்களில் அதிக வியாபாரம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை வரும் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. சில அமைப்புகள் வரும் 2ம் தேதியும் பிறை அடிப்படையில் இப்பண்டிகையை கொண்டாட உள்ளனர்.

ரம்ஜான் பண்டிகைய ஒட்டி மேலப்பாளையம் கால்நடை சந்தையில் நேற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, தேனி உள்ளிட்ட பல்ேவறு இடங்களை சேர்ந்த வியாபாரிகள் ஆடுகளை சந்தைக்கு கொண்டு வந்து குவித்தனர். ஆடு ஒன்றுக்கு ரூ.50 கட்டணமும், மாடு ஒன்றுக்கு ரூ.100 கட்டணமும் கொடுத்து சந்தைக்குள் சென்று வியாபாரத்தை களை கட்ட வைத்தனர். ரம்ஜான் பண்டிகையில் செம்மறி ஆடுகள் தேவை அதிகம் என்பதால், நேற்று கூடுதல் செம்மறி ஆடுகள் சந்தைக்கு வந்திருந்தன. பாவூர்சத்திரம், அடைக்கலபட்டினம் பகுதியில் இருந்து நீள காதுகள் கொண்ட தலசேரி 17 ஆட்டு குட்டிகள் வந்தன.

இவை தலா ஒரு குட்டி ரூ.6 ஆயிரம் என உடனடியாக விற்றுத் தீர்ந்தது.சந்தையை ஒட்டியுள்ள நேதாஜி சாலை, மேலப்பாளையம் சக்திநகர் பகுதியிலும் குவிந்த வியாபாரிகளால் கோழி விற்பனையும் களை கட்டியது. ஆடுகள் தேவை அதிகரித்த சூழலில் மேலப்பாளையம் சந்தையில் வாட்டசாட்டமான ஆடுகள் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. நடுத்தர ஆடுகள் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. கோழிகளை பொறுத்தவரை கிலோ ரூ.500 என விற்பனையாகின. ரம்ஜான் பண்டிகைக்கு ஆடுகளை சிலர் மொத்தமாக விலை பேசி மினி லாரிகளில் வாங்கிச் சென்றனர். இதனால் சந்தையில் பண்டிகை வியாபாரம் களை கட்டி காணப்பட்டது.

ஒரு ஆடு விலை ரூ.23 ஆயிரம்

கயத்தாறு பகுதியை சேர் ந்த கருப்பசாமி என்பவர் நல்ல தரமான நாட்டுக்கிடா ஒன்றை சந்தைக்கு நேற்று கொண்டு வந்திருந்தார். அதன் விலை ரூ.23 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டது. அந்த ஆட்டை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.

Tags : Upper Palaiyam market , NELLY: Sheep and goats flocked to the Upper Palaiyam market yesterday ahead of the Ramadan festival. Merchants for the festival in mini trucks
× RELATED பொங்கல் விற்பனை களை கட்டியது...