வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இன்று மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், அதையொட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் குறிப்பிட்டிருக்கிறது.

Related Stories: