×

திருப்பதியில் இருந்து மசூலிப்பட்டினம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென தடம் புரண்டதால் பரபரப்பு

திருப்பதி : திருப்பதியில் இருந்து மசூலிப்பட்டினம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பதியில் இருந்து மசூலிப்பட்டினம் செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு 9 மணிக்கு திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. கிளம்பிய சில நிமிடங்களில் திருப்பதி பீமாஸ் ஹோட்டல் அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் சென்று கொண்டு இருந்த போது, ரயிலின் சக்கரம் திடீரென தடம் புரண்டது.

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே துறை அதிகாரிகள், சம்பவ இடத்தை பார்வையிட்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விரைவு ரயிலுக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தடம் புரண்ட ரயிலின் சக்கரத்தை மீண்டும் தண்டவாளத்தில் வைத்து புனரமைக்கும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். சுமார் 6 மணி நேரத்திற்கு பிறகு நிலைமை சீரானதால், மசூலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்றது. இதனால் ரயில் பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர்.


Tags : Tirupati ,Masulipatnam , Tirupati, Masulipatnam, Express, Rail, Track
× RELATED வாக்கு எண்ணிக்கையில் சிறப்பாக...