×

தமிழகத்தில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் கோயம்பேடு பழச்சந்தையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு: 7.5 டன் மாம்பழங்கள் பறிமுதல்

சென்னை: தமிழகத்தில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளது. குறிப்பாக சேலம், தருமபுரி மாவட்டங்களில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆந்திரா, மற்றும் சேலம் தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை கோயம்பேடு பழச்சந்தைக்கு நாள் தோறும் மாம்பழ வருகையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் செயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்கவைப்பதாக புகார் எழுந்த நிலையில் இன்று காலை 4 மணி முதல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஒவ்வொரு கடைக்கும் சென்று மாம்பழங்கள் செயற்கை முறையில் பழுக்கவைக்கப்படுகிறதா உள்ளட்ட பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்தினர்.

இந்த சோதனையின் முடிவில் 7.5 டன் மாம்பழங்கள் செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்டது கண்டறியப்பட்டது. உடனடியாக அந்த மாம்பழங்கள் அனைத்திலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சதீஸ்குமார்:
சென்னையை பொறுத்தவரையில் மக்கள் அதிக அளவில் வாசிக்க கூடிய பகுதி, மாம்பழ சீசன் தற்போது தொடங்கியிருள்ள சூழலில் மாம்பழத்தை மக்கள் அதிக அளவு மக்கள் விரும்பி சாப்பிட கூடிய இந்த நேரத்தில் இது போன்ற செயல்கள் கண்டிக்கதக்கது எனவும், மக்களுக்கு விற்பனை செய்யப்படும் முன்னதாக இந்த மாம்பழங்களை பறிமுதல் செய்திருப்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் தெரிவித்தார்.

அதே போல மாம்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்க முயன்ற  ஒவ்வொரு வியாபாரிக்கு  தலா ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுளளதாகவும், இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட கூடிய வியாபாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்கான பரிந்துரைகள் வழங்கப்டும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஸ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Tags : Coimpedu ,Tamil Nadu , Tamil Nadu, Mango Season, Coimbatore Fruit Market, Food Security Officers, Mangoes Seized
× RELATED நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள்...