×

கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர் சேர்க்கையில் எம்பிக்கள் சிறப்பு ஒதுக்கீடு ரத்து: ஒன்றிய அரசு உத்தரவு

டெல்லி: கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர் சேர்க்கையில் எம்பிக்கள் சிறப்பு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்பு கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஒரு எம்.பி.யால் 10 மாணவர்களை சேர்க்க பரிந்துரைக்க முடியும். ஒன்றிய அரசு பள்ளிகளில் சேர ஏராளமான கோரிக்கைகள் வருவதால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இட ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. இதனை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக ஒன்றிய கல்வி துறை அமைச்சர் அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் அல்லது அதனை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் ஒன்றிய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரை கடிதத்தின் அடிப்படையியில் மாணவர் சேர்க்கை நடத்தும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்.பி.க்கள் ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து ஒதுக்கீடுகளையும் ஒன்றிய அரசு ரத்து செய்தது. கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச ஒதுக்கீடு முறை இந்தாண்டும் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.


Tags : Kendriya Vidyalaya School , Kendriya Vidyalaya School Students' Admission Cancellation of Special Allocation of MPs: Government Order
× RELATED கேட்டு, கேட்டு ஓய்ந்த எம்பிக்கள் 10...