தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்..!

சென்னை: தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தஞ்சை தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்ததற்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; தஞ்சை களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக தேர் மின்கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்தார்.

விபத்தில் 16 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் நான் உத்தரவிட்டுளேன். களிமேடு தேர்த் திருவிழா விபத்து தொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்த, தஞ்சை மாவட்ட பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேரடியாக சென்று, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல இருக்கிறேன் எனவும் கூறினார்.

Related Stories: