நகராட்சி பள்ளியில் மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு

பொன்னேரி: பொன்னேரி நகராட்சி, வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறுசீரமைப்பு கூட்டம் நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை குளோரி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், நகர்மன்ற உறுப்பினர்கள் சாமுண்டீஸ்வரி யுவராஜ், மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மேலாண்மைக் குழு தலைவராக டி.வி.பாஸ்கரன், துணைத் தலைவராக ஜீவிதா, உறுப்பினர்களாக 13 பேர் தேர்வு செய்யப்பட்டனர். குழு ஒருங்கிணைப்பாளராக பள்ளி ஆசிரியை ஆதுர்ஜெயா தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories: