45 கோடி பேரின் நம்பிக்கை போச்சு: ராகுல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: நாட்டில் 45 கோடி பேர் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டதாக காங்கிரஸ் முன்னாள்  தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒன்றிய அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில், நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் தொடர்பாக பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.

இது குறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘45 கோடிக்கும் அதிகமான மக்கள்  வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழக்க செய்த முதல் பிரதமர் மோடிதான். புதிய இந்தியாவின் புதிய முழக்கமானது ஒவ்வொரு வீட்டிலும் வேலையில்லா திண்டாட்டம், வீட்டுக்கு வீடு வேலையின்மை என்பதாகும். கடந்த 5 ஆண்டுகளில் 21 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். 45 கோடி பேர் வேலை தேடுவதை நிறுத்தி விட்டதாக செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: