களைகட்டிய சன் குடும்பம் விருதுகள் விழா: லட்சக்கணக்கான நேயர்கள் வாக்களித்த கலைஞர்களுக்கு விருதுகள்

சென்னை: சன் குடும்பம் விருதுகள் விழாவில் பேவரைட் கேட்டகிரியில் லட்சக்கணக்கான நேயர்கள் வாக்களித்து தேர்வு செய்த மனம் கவர்ந்த கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் சிறப்பாக நடித்த கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு, ‘சன் குடும்பம் விருதுகள்’ பெயரில் விருதுகள் வழங்கி சன் டிவி கவுரவித்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான சன் குடும்பம் விருதுகள் வழங்கும் விழாவின் முதல் பாகம் கடந்த ஏப்ரல் 17, இரண்டாம் பாகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பானது. இதில் பேவரைட் கேட்டகிரி என்ற புதிய பிரிவில் லட்சக்கணக்கான நேயர்கள் வாக்களித்து தங்களின் மனம் கவர்ந்த நாயகன், மனம் கவர்ந்த நாயகி, மனம் கவர்ந்த மெகாத்தொடர், மனம் கவர்ந்த வில்லி, மனம் கவர்ந்த ஜோடிகளை தேர்வு செய்தனர். விழாவில் அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

விழாவில் விருதுகள் பெற்றவர்கள் விவரம்:

மக்களின் மனம் கவர்ந்த மெகாத் தொடர் - சுந்தரி. மனம் கவர்ந்த நாயகன் - அர்ஜுன் (ரோஜா). மனம் கவர்ந்த நாயகி - சுந்தரி (சுந்தரி). மனம் கவர்ந்த ஜோடி - அர்ஜுன், ரோஜா (ரோஜா). மனம் கவர்ந்த வில்லி - அனு (ரோஜா).

நட்சத்திர நாயகன் - எழில் (கயல்). சிறந்த தந்தை - முருகன் (சுந்தரி). சிறந்த வில்லன் - தர்மலிங்கம் (கயல்). சிறந்த குழந்தை நட்சத்திரங்கள் - அபி, முகில், சுமோ (அபியும் நானும்), நிலா (சுந்தரி), சுந்தர் (தாலாட்டு). சிறந்த சகோதரன் - சின்ராசு (வானத்தை போல). சிறந்த சகோதரி - துளசி (வானத்தை போல). சிறந்த இளம் ஜோடி - ராஜா, அஞ்சலி (திருமகள்). சிறந்த வசனம் - ராதாகிருஷ்ணன் - விஜயலட்சுமி (சுந்தரி), கார்த்திக் யுவராஜ் (அபியும் நானும்). சிறந்த இயக்குனர்கள் - செல்வம் (கயல்), அழகர் (சுந்தரி). சிறந்த குடும்பம் - பாண்டவர் இல்லம். வாழ்நாள் சாதனையாளர் விருது - லதா. சிறந்த பின்னணி குரல் (ஆண்) - வாசு (கண்ணான கண்ணே), விக்னேஷ் (சுந்தரி). சிறந்த ஒளிப்பதிவு - முருகன் (சுந்தரி). சிறந்த திரைக்கதை - அய்யப்பன் சபாபதி (கயல்), ராதாகிருஷ்ணன் (சுந்தரி). சிறந்த பாடலாசிரியர் - பா.விஜய் (கயல்). சிறந்த பாடல் இசை - சாம் சி.எஸ். (கண்ணான கண்ணே). சிறந்த பின்னணி இசை - கிளமென்ட் (கண்ணான கண்ணே).

சின்னத்திரை கலைஞர்களின் கலக்கலான நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மேலும் சன் குடும்பம் தொழில்நுட்ப விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை மே தினத்தன்று காலை 9 மணி முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகும்.

Related Stories: