வேலூரில் காதலனை தாக்கி இளம்பெண் கூட்டு பலாத்காரம் 3 பேர் குற்றவாளிகள்: இன்று தண்டனை அறிவிப்பு

வேலூர்: வேலூர் அடுத்த அடுக்கம்பாறை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண், வேலூரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வந்தார். இவரும் அதே கடையில் வேலை பார்க்கும் காட்பாடியை சேர்ந்த வாலிபரும் காதலித்து வந்தனர். 2020 ஜனவரி 18ம் தேதி இரவு கோட்டை பூங்காவிற்கு சென்று, அகழி கரையோரம் பேசி கொண்டிருந்தபோது 3 பேர் காதலனை சரமாரி தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி அவர் கண் முன்னே இளம்பெண்ணை 3 பேரும் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், இளம்பெண்ணின் தங்கச் சங்கிலி, கம்மல் மற்றும் இளைஞரின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர்.

புகாரின்படி வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து வேலூர் கஸ்பாவை சேர்ந்த மணிகண்டன்(41), வசந்தபுரம் சக்திவேல்(19), தொரப்பாடி மாரிமுத்து(31) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த வேலூர் மகிளா கோர்ட் மாஜிஸ்திரேட் 3 பேரும் குற்றவாளிகள் என்றும், தண்டனை விவரங்களை இன்று அறிவிப்பதாகவும் நேற்று அறிவித்தார்.

Related Stories: