அரசியல் பிரவேசத்தில் கூட்டணியா?..திருச்சியில் சசிகலா பேட்டி

திருச்சி: அரசியல் பிரவேசத்தில் கூட்டணியா? பொறுத்திருந்து பாருங்கள் என திருச்சியில் சசிகலா தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்று சசிகலா சாமி தரிசனம் செய்து வருகிறார். அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்ய, சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று திருச்சி வந்தார். பின்னர் காரில் மயிலாடுதுறை புறப்பட்டு சென்றார்.

முன்னதாக செய்தியாளர்கள் அவரிடம், அரசியல் பயணம் தனியாகவா அல்லது கூட்டணி கட்சியுடனா என கேட்டதற்கு, பொறுத்திருந்து பாருங்கள் என்றார். மேலும் உங்களை வரவேற்க வரும் அமமுகவினரை டிடிவி தினகரன், கட்சியை விட்டு நீக்குகிறாரே? என கேட்டதற்கு, பதில் சொல்ல மறுப்பு தெரிவித்து கோயிலுக்கு செல்கிறேன். இதுகுறித்து பின்னர் பதிலளிக்கிறேன் என தெரிவித்தார்.

Related Stories: