பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆங்கில அறிவை வளர்க்க பிரிட்டிஷ் கவுன்சிலுடன் ஒப்பந்தம்

சென்னை: பேரவையில் மானியக் கோரிக்கை விவாதத்தில் கலந்து கொண்டு பூந்தமல்லி தொகுதி உறுப்பினர் கிருஷ்ணசாமி (திமுக) கேட்ட கேள்விக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அளித்த பதில்: முதல்வர், பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவர்கள் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் வகையில் பிரிட்டிஷ் கவுன்சிலுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன் மூலம் ஆங்கில அறிவை பெருக்கி அதன் மூலம் திறன் மேம்பாட்டை கொண்டு வந்து எல்லா நிறுவனங்களிலும் நிச்சயமாக தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்ற நிலையை திமுக ஆட்சி மாற்றும். கிருஷ்ணசாமி: வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் போலி சான்றிதழ் பெற்று தமிழகத்தில் பணியில் சேர்ந்துள்ளனர். அவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பூந்தமல்லி தொகுதியில் வெளிமாநில தொழிலாளர்கள் நிறைய பேர் தங்கியிருந்து பணிபுரிகின்றனர். 8 மணி நேர பணி என்பதை அவர்களுக்கும் செயல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

Related Stories: