அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தினவிழா பொதுக்கூட்டம்: ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுக தலைவர்களான ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: மே தினக் கொண்டாட்டங்கள் மூலம் தொழிலாளர்களின் பெருமையை உலகிற்கு பறை சாற்றுவதோடு நின்றுவிடாமல் உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகள் உலகெங்கும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க மே தினத்தை கொண்டாடும் வகையில் அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்ட தலைநகரங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் வரும் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று மே தின விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. மேலும் மே தின பொதுக்கூட்டங்களில் சென்னை, புரசைவாக்கம், தானா தெருவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் கமலக்கண்ணன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மற்றும் கள்ளக்குறிச்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்எல்ஏ குமரகுரு ஆகியோர் பொதுக்கூட்டங்கள் உரையாற்றுகின்றனர்.

Related Stories: