சர்ச் திருவிழாவுக்கு அழைப்பது போன்று பேசி: ஏஜென்சி உரிமையாளரிடம் செயின் பறிப்பு :மார்த்தாண்டத்தில் பரபரப்பு

மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட குழித்துறை  ரயில் நிலையம் பல்லன்விளையை சேர்ந்தவர் செல்லத்துரை (76). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். தற்போது  கடைகளுக்கு பொருட்கள் சப்ளை செய்யும் ஏஜென்சி நடத்திவருகிறார். அவருக்கு மனைவி  மற்றும் மகள் உண்டு. மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 9.45 மணிக்கு வீட்டின் காலிங் பெல் ஒலிக்கும் சத்தம் கேட்டுள்ளது. உடனே மாடியில் இருந்த செல்லதுரை கீழே இறங்கி கதவைத் திறந்து பார்த்துள்ளார். அப்போது டிப்டாப் உடை அணிந்த ஆசாமி ஒருவர் நின்று உள்ளார்.

 

உடனே அந்த நபர் ஐரேனிபுரத்தில் சர்ச் திருவிழா நடக்கிறது. நீங்கள் ஏன் வரவில்லை என்று கேட்டு உள்ளார். இதனால் தெரிந்தவர் என்று நினைத்து அவரை வீட்டுக்குள் அனுமதித்து உள்ளார். பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மர்ம ஆசாமி கண் இமைக்கும் நேரத்தில் செல்லத்துரையின்  கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்கச் செயினை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் வெளியில் தயாராக இருந்த  மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்தவருடன் ஓடிவிட்டார்.

உடனே கணவர், மனைவி 2 பேரும் கத்திக கூச்சலிட்டு ஊரைக் கூட்டினர். அக்கம்பக்கத்தினர்  வருவதற்கு முன்பு திருடர்கள் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தனர். உடனே போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று அங்கு பதிவாகி உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டிற்கு உள்ளே சென்று திருடர்கள் செயின் பறித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: