அயோத்தியா மண்டப விவகாரம்; தனநீதிபதி உத்தரவை பின்பற்றி அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவுகள் ரத்து: மேல்முறையீட்டு வழக்கில் நாளை விசாரணை

சென்னை: அயோத்தியா மண்டப விவகாரத்தில் அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவுகள் ரத்து செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனநீதிபதி உத்தரவை பின்பற்றி அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவுகள் ரத்து செய்யப்படும் என தலைமை நீதிபதி அமர்வு கூறினார். அயோத்தியா மண்டப நிர்வாகத்தை எடுத்த அறநிலையத்துறை உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் நாளை ஆணை பிறப்பிக்கப்பட உள்ளது. ஸ்ரீராம் சமாஜ் செய்த வழக்கில் தீர்ப்பை நாளை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அயோத்தியா மண்டப நிர்வாகத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து அரசு விசாரணை நடத்தலாம் எனவும் ஐகோர்ட் கூறியுள்ளது. குற்றச்சாட்டு குறித்து ஆதாரங்களை வழங்கி, சாட்சியங்களை விசாரித்து ஆட்சேபங்களை பதிவு செய்து விசாரிக்கலாம் எனவும் கூறியுள்ளது.  விசாரணை அடிப்படையில் அரசு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

சென்னை மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீ ராம் சமாஜ் என்ற அமைப்பின் மூலம் அயோத்யா மண்டபம் 1954 ஆம் ஆண்டு கட்டப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வந்தது. பொதுமக்களிடம் நன்கொடை மற்றும் காணிக்கை பெற்று செயல் பட்டு வருகின்றது. அந்த அமைப்பு நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்த நிலையில், அயோத்யா மண்டபத்தை கடந்த 2013ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கீழ் கொண்டுவந்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, இராம சமாஜம் அமைப்பு சார்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை கடந்த மாதம் விசாரித்த தனி நீதிபதி வி.எம். வேலுமணி, பிறப்பித்த உத்தரவில், இந்து சமய அறநிலையத்துறை சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்யா மண்டபத்தை கையகப்படுத்தாலம் எனவும் ஸ்ரீ ராம் சமாஜ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து ஸ்ரீ ராம் சமாஜ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

Related Stories: