×

துபாயில் இந்திய துணைத்தூதரகம் சார்பில் இஃப்தார் மற்றும் நல்லிணக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி

துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய அரசின் சார்பில் துபாய், இந்திய துணைத் தூதரகமும் துபாய் தமிழ் சமூக அமைப்பான  ஈமான் கலாச்சார மையம்  இணைந்து வழங்கிய இஃப்தார் மற்றும் நல்லிணக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. துபாயில் உள்ள ரேடிசன் ப்ளு ஹோட்டலில் குர்ஆன் வசனம் ஓதி  நிகழ்ச்சி துவங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல் முறையாக கனடா அமெரிக்கா பிலிப்பைன்ஸ் ஜப்பான் உள்ளிட்ட 12 நாடுகளின் துணை தூதர்கள், சேக் கலீபா பின் ஹசீர் பின் கலிபா அல் மக்தூம் உள்ளிட்ட அமீரக பிரமுகர்களும் சமூக நல மேம்பாட்டுத்துறையின் உயர் அதிகாரி டாக்டர் ஒமர் உள்ளிட்ட அதிகாரிகளும் மற்றும் அமீரக அரசின் உயர் அதிகாரிகளும், தொழில் அதிபர்களும் இதில் கலந்து சிறப்பித்துள்ளார்.

முதல்முறையாக இந்திய துணை தூதரகம்  தமிழ் அமைப்பான  ஈமான் அமைப்புடன் இணைந்து நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. இந்நிகழ்ச்சி இந்திய துணை தூதரக உயர் அதிகாரி ராம்குமார் மற்றும் ஈமான் அமைப்பின் தலைவர் பிஎஸ்எம் ஹபிபுல்லாகான் தலைமையில்,  பொதுச்செயலாளர் ஹமீது யாசின் முன்னிலையில் தொழிலதிபர்கள் பிரின்ஸ் இளவரசன் கனகராஜ்,  ஆபித் ஜுனைத், கமால் வாழன் அசார், பிலாக் துளிப் இம்ரான், ஆலியா டிரேடிங் பைசல் மற்றும் ஈமான் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பொதுச்செயலாளர் ஹமீது யாசின் முன்னிலையில் விழாக்குழு செயலாளர் நஜீம் மரிக்கா, ஐடி செயலாளர் சமீர்,  நிர்வாகிகள் எஸ்பிஎஸ் நிசாம், ராசிக், இம்தாதுல்லா, ஷேக் உள்ளிட்டோர் பணிகளை செய்தனர். ஈமான் அமைப்பு சமூக நல பணிகள் சிறப்பாக செயல்படுகிறது. பல்வேறு நாடுகளின் தூதர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவித்தனர்.

Tags : Iftar and Reconciliation ,Consulate General of India ,Dubai , Embassy of India in Dubai, Iftar, event
× RELATED லக்கேஜ்களை மதுரையிலேயே விட்டு விட்டு...