×

எலான் மஸ்க் கருத்துக்கு எதிர்வினை சுதந்திரமான பேச்சுரிமை வெறுப்பை ஊக்குவிக்கும்: டுவிட்டரில் இருந்து வெளியேறிய ஹாலிவுட் நடிகை

லண்டன்: சுதந்திரமான பேச்சு குறித்து எலான் மஸ்க் வெளியிட்ட பதிவுக்கு எதிர்வினையாக, டுவிட்டரில் இருந்து வெளியேறுவதாக நடிகை ஜமீலா ஜமீல் அறிவித்துள்ளார். டுவிட்டர் நிறுவனத்தை பிரபல தொழிலதிபர் எலோன் மஸ்க் வாங்கியுள்ள நிலையில், சர்வதேச பிரபலங்கள் தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஹாலிவுட் நடிகையும், தொகுப்பாளருமான ஜமீலா ஜமீல் வெளியிட்ட பதிவில், ‘ஆஹா! அவருக்கு டுவிட்டர் கிடைத்துவிட்டது. இது என்னுடைய கடைசி டுவிட்டாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் (எலான் மஸ்க்) கூறியுள்ள சுதந்திரமான பேச்சுரிமை என்பது நரகத்தின் தளத்திற்கு கொண்டு சேர்க்கும். தீங்கான நடத்தையை ஊக்குவிக்கும். வெறுப்பு, மதவெறி, பெண் வெறுப்பு  ஆகியவற்றை ஊக்குவிக்கும் என்று நான் அஞ்சுகிறேன்.

அதிர்ஷ்டவசமாக இதில் இருந்து வெளியேறுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். மேலும், அந்த பதிவில் தனது செல்ல நாயுடன் இருக்கும் நான்கு புகைப்படங்களை இணைத்துள்ளார். இதுவே அவரை பின்தொடர்பவர்களுக்காக இறுதி செய்தியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே எலான் மஸ்க், டுவிட்டரை வாங்குவதாக தகவல் வெளியான போது, ஜமீலா ஜமீல் வெளியிட்ட பதிவில், ‘எலோன் மஸ்க் டுவிட்டரை வாங்குவதால் ஏற்படும் நல்ல விஷயம் என்னவென்றால், நான் அதில் இருந்து வெளியேறுவேன். சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதை விரும்பவில்லை. உங்கள் அனைவருக்கும் வெற்றி வெற்றி’ என்று குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Elan Musk , Elon Musk, comment, on Twitter, exit, Hollywood actress
× RELATED புதிய மனிதா.. பூமிக்கு வா! எலான் மஸ்க் உருவாக்கிய எந்திரன்!